கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு
திருவிடைமதூர் அருகே கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடமங்குடி கிராமத்தில் களத்தடி மேட்டு தெருவைச் சேர்ந்த காந்திராஜ் என்பவர் இன்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் முதலை இருப்பதைக் கண்டு அஞ்சி கூச்சலிட்டு மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே வனத்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் அவர் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன், மகாராஜபுரம் ஊராட்சி எழுத்தர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் வனவர் சண்முகம் தலைமையில் வனகாவலர்கள் துளசி ராமன், அருமைதுரை ஆகியோர் காந்திராஜா வீட்டு பின்புறம் இருந்த 3 அடி முதலையை கயிறு மூலம் கட்டி வேனில் பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
Advertisement
Advertisement
பின்னர் அந்த முதலையை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர். கடமங்குடிக்கு வந்த முதலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.