முகப்பு
தமிழ்நாடு

சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவாயில் வளைவு முழுமையாக இடிப்பு!

அவ்வழியாக பயணிப்போரின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக நுழைவாயில் வளைவு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது..

Updated On : 3 ஆகஸ்ட் 2024, 6:02 pm IST
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நுழைவுநுழைவாயில் வளைவில் லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் அந்த வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிர்:

திருச்சி மாவட்டம் சமயபுரம் மரியம்மன் கோயில் நுழைவுநுழைவாயில் வளைவு லாரி மோதியதில் இடிந்தது.

வெள்ளிக்கிழமை இரவு சமயபுரத்திலிருந்து கருக்காய் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று நுழைவுநுழைவாயில் வளைவில் மோதியது. இதில் கோயிலின் நுழைவு வாயிலின் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நுழைவு வாயிற் சுவர்களில் லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டு உள்ள நுழைவு வாயிற் சுவர்

இதனால் கோயில் நுழைவு வாயில் சுவர் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலை உள்ளதால் இருபுறமும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, அந்த வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, நுழைவாயிற் சுவரின் மேற்பகுதியில் இருந்த 3 சாமி சிலைகளை கிரேன் உதவியுடன் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டதுடன், 3 சாமி சிலைகளும் கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.அதன்பின், அருகிலுள்ள கடைகளுக்கு சேதாரம் ஏற்படாத வகையில் நுழைவு வாயில் சுவர் முற்றிலுமாக இடித்து தகர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments