முகப்பு
தமிழ்நாடு

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Updated On : 13 நவம்பர், 2024 at 6:08 PM
சிறப்பு ரயில்கள்
பகிர்:
Updated On : 13 நவம்பர், 2024 at 6:07 PM

விழுப்புரம்: பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரம் மற்றும் வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை (நவ.15) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் சுவாமி திருக்கோயிலில் பௌர்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

Advertisement

அந்த வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை (நவ.15) காலை 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ.எண்.06130) முற்பகல் 11 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

Updated On : 13 நவம்பர், 2024 at 6:07 PM

இதுபோன்று விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு ரயில் (வ.எண்.06131) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை (நவ.16) அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் (வ.எண்.06132) காலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.

இந்த இரு ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.