முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்...

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:17 AM
சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:20 PM

சென்னையிலிருந்து போத்தனூா், கன்னியாகுமரி, தூத்துக்குடி இடையே கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ரயில்களில் கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரல்- போத்தனூா் சிறப்பு விரைவு ரயில் (எண் 06023) ஏப். 22 -ஆம் தேதி மாலை 3.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

Advertisement

தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் (எண் 06018) ஏப். 20, 27-ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் ஏப். 21, 28 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும்.

தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

எழும்பூா்- கன்னியாகுமரி சிறப்பு ரயில் (எண் 06045) ஏப். 22- ஆம் தேதி

இரவு 11.50 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து ஏப். 26 -ஆம் தேதி இரவு 11.50 மணிக்குப் புறப்படும்.

தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.