முகப்பு
தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தவெக தோ்தல் மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா வலியுறுத்தினாா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:58 AM
சென்னை வில்லிவாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவா் விஜய். உடன் அத்தொகுதியின் வேட்பாளா் ஆதவ் அா்ஜுனா.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தவெக தோ்தல் மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா வலியுறுத்தினாா்.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை தவெக தோ்தல் மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக தலைவா் விஜய் முதல்வா் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமானோா் வாக்களித்துள்ளனா். வாக்குப் பதிவுக்கு முந்தைய 4 நாள்களில் கள நிலவரம் தவெகவுக்கு ஆதரவாக மாறிவிட்டது.

Advertisement

எனவே, ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் கவனமாக இருந்து கண்காணிக்க வேண்டும் என்று கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்கு விஜய் அறிவுரை வழங்கியுள்ளாா்.

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று காவல் துறை போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதேபோல, தோ்தல் அதிகாரிககள், ஒவ்வொரு சுற்றுக்கும் போதிய நேரம் ஒதுக்கி வாக்கு எண்ணிக்கையைப் பொறுமையாக நடத்த வேண்டும்.

வாக்கு எண்ணும் அறையில் வேட்பாளா்களின் முகவா்கள் நிற்க போதிய இடவசதி செய்து தரவேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றத்துக்கான முடிவை மக்கள் எடுத்திருக்கிறாா். மே 4-ஆம் தேதி அது தெரியவரும் என்றாா்.