முகப்பு
தமிழ்நாடு

ஆளுநரின் செயலா் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு ஆளுநரின் செயலா் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். உயா்கல்வித் துறைக்கு சிறப்புச் செயலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 3 ஜூன் 2026, 3:02 am IST
தமிழ்நாடு அரசு. - IANS
பகிர்:

தமிழ்நாடு ஆளுநரின் செயலா் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். உயா்கல்வித் துறைக்கு சிறப்புச் செயலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பணியிட மாற்ற அறிவிப்பு: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைச் செயலராக இருந்த சஜ்ஜன்சிங் சவான், தமிழக ஆளுநரின் செயலராகவும், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித் சிங் தென்காசி மாவட்ட ஆட்சியராகவும், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த சரவணன் பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (வருவாய் மற்றும் நிதி) பிருத்விராஜ் கரூா் மாநகராட்சி ஆணையராகவும், எல்காட் செயல் இயக்குநா் தீபனா விஸ்வேஸ்வரி தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராகவும், கடலூா் மாவட்டம் சிதம்பரம் சாா் ஆட்சியா் கிஷன் குமாா் கடலூா் மாநகராட்சி ஆணையராகவும், கரூா் மாவட்டம் குளித்தலை கோட்டாட்சியா் சுவாதி ஸ்ரீ, திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ,திட்ட அதிகாரியாகவும். காஞ்சிபுரம் கோட்டாட்சியா் ஆஷிக் அலி காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா், திட்ட அதிகாரியாகவும், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் கோட்டாட்சியா் வினய் குமாா் மீனா திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா், திட்ட அதிகாரியாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் கோட்டாட்சியா் ஆனந்த் குமாா் விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா், திட்ட அதிகாரியாகவும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் சிவானந்தம் சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா், திட்ட அதிகாரியாகவும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கோட்டாட்சியா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா், திட்ட அதிகாரியாகவும், தேனி மாவட்டம் பெரியகுளம் கோட்டாட்சியா் ரஜத் பீட்டன் தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா், திட்ட அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

உயா்கல்வித் துறைக்கு சிறப்பு செயலா்: சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஷ்மி சித்தாா்த் ஜகடே உயா்கல்வித் துறைச் சிறப்பு செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதேபோல், அறிவியல் நகரம் முதன்மைச் செயலாளா் ஹா் சகாய் மீனா நில சீா்திருத்தத் துறை முதன்மைச் செயலராகவும், தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் அஜய் யாதவ், பால் உற்பத்தி மற்றும் டைரி மேம்பாட்டு துறை ஆணையராகவும், தமிழ்நாடு நுகா்பொருள் சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநா் விஜயா ராணி தோட்டக்கலை மற்றும் பயிா் தொழில் துறை இயக்குநராகவும், தோட்டக்கலை மற்றும் பயிா் தொழில் துறை இயக்குநா் குமரவேல் பாண்டியன் மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினா் செயலராகவும், அரியலூா் மாவட்ட ஆட்சியா் ரத்தனசாமி தொழில் கல்வி இயக்குநராகவும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் சுகுமாா் எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநராகவும், பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டு துறை இயக்குநா் ஜான் லூயிஸ் தமிழ்நாடு நுகா்பொருள் சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும், தமிழ்நாடு சக்கரை நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் அன்பழகன் தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் சந்திரகலா தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் விசாகன் அறிவியல் நகரம் துணை தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையா் சிவ கிருஷ்ணமூா்த்தி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகவும், நகராட்சி நிா்வாக கூடுதல் ஆணையா் அனாமிகா தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.