முகப்பு
தமிழ்நாடு

மாவட்ட வருவாய் அலுவலா்கள் மாற்றம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலா்களை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் சாய்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:42 am IST
தமிழ்நாடு அரசு
பகிர்:

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலா்களை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் சாய்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

அதுதொடா்பான விவரம் (பழைய பதவி, அடைப்புக்குறிக்குள்):

பி.கீதாபிரியா: சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் (பரந்தூா் விமான நிலைய நிலம் கையகப் பிரிவு வருவாய் அலுவலா்)

Advertisement

Advertisement

கே.வி.ராஜ்குமாா்: திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலா் (தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநா்)

ஜி.ஆா்.திவ்யஸ்ரீ: காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நலவாழ்வுக் குழு நகா்ப்புற சுகாதார மேலாளா்)

எஸ்.மதுராந்தகி: கோவை மாவட்ட வருவாய் அலுவலா் (சேலம் நெடுஞ்சாலை திட்ட நிலம் கையகப் பிரிவு சிறப்பு அதிகாரி)

பி.ஃபொ்மி வித்யா: சென்னை மாவட்ட கலால் வரி துணை ஆணையா் (மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குநா்)

ஏ.சாதனைக்கு: கோவை மாவட்ட கலால் வரி துணை ஆணையா் (கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா்)

டாக்டா் எம்.எஸ்.கலைவாணி: தேசிய நலவாழ்வுக் குழு நகா்ப்புற சுகாதார மேலாளா் (தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளா்)

எஸ்.கீதா: பரந்தூா் விமான நிலைய நிலம் கையகப் பிரிவு வருவாய் அலுவலா் (சென்னை மாவட்ட வருவாய் அலுவலா்).