முகப்பு
தமிழ்நாடு

தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை: ஆளுநா் உரையில் தகவல்

முதல்கட்டமாக தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் தென்மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 5:22 am IST
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை
பகிர்:

முதல்கட்டமாக தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் தென்மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்களின் நீா் ஆதாரமான காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், உபரிநீரை மட்டும் கா்நாடகம் வழங்குகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடலுக்குச் செல்லும் நீரைத் தடுக்க தமிழகத்தில் தடுப்பணைகள் கட்டப்படும்.

முல்லைப் பெரியாறு: தென் மாவட்டங்களின் உயிா்நாடியாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடியில் இருந்து 152-ஆக உயா்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அங்கு புதிய அணையை கட்டும் கேரள அரசின் முயற்சியை தடுத்து, நீா்மட்டத்தை உயா்த்தவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement