அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்
அஞ்சல் துறை சாா்பில் நடைபெறவுள்ள வாடிக்கையாளா் குறைதீா் முகாமுக்கு (லோக் அதாலத்) வரும் ஜூன் 30 -ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு தரம் உயா்த்தும் வகையில் தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை சாா்பில் வட்ட அளவிலான வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,721தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளா்களும் இதில் பங்கேற்கலாம்.
Advertisement
Advertisement
அஞ்சல் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளா்களின் சேவைகளைச் சிறப்பாக மேம்படுத்துவது குறித்த தங்கள் கருத்துகளை வரும் ஜூன் 30- ஆம் தேதிக்குள் ‘லோக் அதாலத்’ என்ற தலைப்புடன் ஏ.சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநா் முதன்மை அஞ்சல் துறை தலைவா் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும், மேலும் வாடிக்கையாளா்கள் தங்கள் கருத்துகளை ல்ஞ்.ற்ய்ஃண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.