இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, திண்டுக்கல், கரூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, விருதுநகர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை இன்று பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ஈரோடு, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதேசமயம் நாளை(சனிக்கிழமை) நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The Chennai Meteorological Centre has stated that there is a chance of rain in 24 districts of Tamil Nadu until 10 PM.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.