அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவிற்குப் பதில் பிஸ்கட்: அதிகாரிகள் நேரில் விசாரணை
விளாத்திகுளத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவிற்குப் பதில் பிஸ்கட் வழங்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
விளாத்திகுளத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவிற்குப் பதில் பிஸ்கட் வழங்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு இங்கு காலை உணவு திட்டத்தில் 265 மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல மாணவர்களுக்கு காலை உணவு பற்றாக்குறை காரணமாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Advertisement
Advertisement
இந்த புகார் பரபரப்பை கிளப்பியதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு திட்டம் அலுவலர் சாந்தி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் நாகராஜன், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் செல்வி விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் மகாராஜா மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு இன்று வருகை தந்து காலை உணவு திட்ட பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் காலை உணவு திட்டத்தில் இன்று மாணவர்களுக்கு பொங்கல் சாம்பார் வழங்கப்படுவதையும் அவர்கள் சாப்பிடுவதையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் கடந்த வாரத்தில் சில நாட்கள் குறைந்த அளவில் உணவு தயாரித்ததும், மீண்டும் உணவு தயாரிக்க முடியாத காரணத்தினால் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை மற்றும் மாணவர்களின் பசியைப் போக்கும் வகையில் மாணவர்களுக்கு பிஸ்கட் விநியோகம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது
தொடர்ந்து பிஸ்கட் வழங்கப்பட்ட விவகாரம் மற்றும் காலை உணவு திட்ட விசாரணை கள ஆய்வு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Officials conducted an on-site investigation today regarding the incident where biscuits were served instead of nutritious meals to government school students in Vilathikulam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.