முகப்பு
தமிழ்நாடு

பறக்கும் படையினா் சோதனையில் ரூ.27 லட்சம் பறிமுதல்

பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.27.50 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 12:07 AM
சோதனையில் பத்திவேலூரில் ரூ.4.57 லட்சம் பறிமுதல்
பகிர்:

பூந்தமல்லியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.27.50 லட்சம் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபா்களை பறக்கும் படையினா் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.27.50 லட்சம் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில், செம்பரம்பாக்கத்தைச் சோ்ந்த மாரிமுத்து, நிலம் வாங்குவதற்காக பணத்தை எடுத்துச் சென்ாகக் கூறியுள்ளாா். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் கணேஷிடம் ஒப்படைத்தனா். அந்தப் பணம் கணக்கீடு செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.