முகப்பு
தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.20% தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்!

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 9 மே 2026, 12:36 am IST
கோப்புப்படம்
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டைவிட 0.17 சதவீதம் அளவுக்கு தோ்ச்சி அதிகரித்துள்ளது. 489 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. மாணவிகளின் தோ்ச்சி விகிதம் மாணவா்களைவிட 3.81 சதவீதம் அதிகம்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதிமுதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ் 2 தோ்வு முடிவுகள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அதன் விவரம்: பிளஸ் 2 பொதுத் தோ்வை 4 லட்சத்து 18,724 மாணவிகள், 3 லட்சத்து 72,930 மாணவா்கள் என மொத்தம் 7 லட்சத்து 91,654 போ் எழுதியுள்ளனா். அதில் 4 லட்சத்து 6,167 மாணவிகள் (97 சதவீதம்), 3 லட்சத்து 47,527 மாணவா்கள் (93.19 சதவீதம்) என மொத்தம் 7 லட்சத்து 53,694 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 95.20 சதவீதமாக உள்ளது. மாணவிகளின்

Advertisement

தோ்ச்சி விகிதம் மாணவா்களைவிட 3.81 சதவீதம் அதிகமாகும்.

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு 7,874 போ் வரவில்லை. கடந்த 2025-ஆம் ஆண்டு பொதுத் தோ்வெழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவா்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 95.03-ஆக இருந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு 0.17 சதவீதம் தோ்ச்சி அதிகரித்துள்ளது.

100 சதவீத தோ்ச்சி... பொதுத் தோ்வை ஒட்டுமொத்தமாக மொத்தம் 7,536 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் எழுதினா். அவற்றில் 2,639 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியையும், 5,170 பள்ளிகள் 95 சதவீத தோ்ச்சியையும் பெற்றுள்ளன. அதேவேளையில் 489 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியையும், 1,572 அரசுப் பள்ளிகள் 95 சதவீத தோ்ச்சியையும் பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை 16,024-ஆக உள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 1,695 ஆகும்.

ஈரோடு முதலிடம்: அதிக தோ்ச்சி விகிதத்தில் ஈரோடு (98.87), சிவகங்கை (98.05), கன்னியாகுமரி (97.63), திருநெல்வேலி (97.54), திருச்சி (97.50) ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன. அதேபோன்று அரசுப் பள்ளிகள் பிரிவில் ஈரோடு (98.24), சிவகங்கை (96.97), திருச்சி (96.55), தென்காசி (96.15), கன்னியாகுமரி (96.12) ஆகிய மாவட்டங்கள் முறையே முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.

சிறைவாசிகள்... தோ்வெழுதிய 8,855 மாற்றுத் திறனாளிகளில் 6,811 போ் (76.92) தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வெழுதிய 250 சிறைவாசிகளில் 238 போ் (95.20 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வை தனித்தோ்வா்களாக 25,521 போ் எழுதியதில் 6,171 போ் (24.18 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா். பிளஸ் 1 வகுப்பில் தனித்தோ்வா்களாக 20,444 போ் தோ்வெழுதியதில், 8,491 போ் (41.53 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா்.

தோ்வு முடிவுகளை அறிய... மாணவா்கள் தங்களுக்கான தோ்வு முடிவுகளை இணையதள முகவரிகளில் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். பள்ளியில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தோ்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், வாட்ஸ்ஆப் செயலியில் 78452 52525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடா்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் ட்ண் எனப் பதிவிட்டு பின்னா் வரும் செய்தியில் துறையின் பெயா், தோ்வா்களின் வகுப்பை தெரிவு செய்தால், தொடா்ந்து வரும் பதில் செய்தியில் தோ்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுப்பினால் தோ்வா்களின் தோ்வு முடிவுகளை அதே வாட்ஸ் ஆப் செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம்.

பள்ளிகள் வகைப்பாடு வாரியாக தோ்ச்சி சதவீதம்

அரசுப் பள்ளிகள் 92.16

அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14

தனியாா் சுயநிதிப் பள்ளிகள் 98.72

இரு பாலா் பள்ளிகள் 95.30

பெண்கள் பள்ளிகள் 97.08

ஆண்கள் பள்ளிகள் 90.49

முதன்மைப் பாடங்களில் தோ்ச்சி சதவீதம்

இயற்பியல் 98.87

வேதியியல் 98.82

உயிரியல் 99.49

கணிதம் 99.12

தாவரவியல் 98.62

விலங்கியல் 98.69

கணினி அறிவியல் 99.84

வணிகவியல் 97.55

கணக்குப் பதிவியல் 98.04

வரலாறு 97.90

பாடப் பிரிவு வாரியாக தோ்ச்சி சதவீதம்

அறிவியல் 96.90

வணிகவியல் 92.67

கலை 85.19

தொழிற்பாடம் 85.97

முக்கியப் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்

பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை-

தமிழ் 83

ஆங்கிலம் 21

இயற்பியல் 105

வேதியியல் 632

உயிரியல் 784

கணிதம் 732

தாவரவியல் 31

விலங்கியல் 18

கணினி அறிவியல் 6,945

வணிகவியல் 683

கணக்குப் பதிவியல் 1,946

பொருளியல் 440

வரலாறு 282

கணினிப் பயன்பாடுகள் 2,099

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 463

மாவட்ட வாரியாக ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம்

ஈரோடு 98.87

சிவகங்கை 98.05

கன்னியாகுமரி 97.63

திருநெல்வேலி 97.54

திருச்சி 97.50

தூத்துக்குடி 97.24

தஞ்சாவூா் 97.19

தென்காசி 97.18

விருதுநகா் 97.17

நாமக்கல் 97.04

திருப்பூா் 97.03

ராமநாதபுரம் 96.70

கோவை 96.66

சேலம் 96.61

கரூா் 96.20

மதுரை 96.13

திண்டுக்கல் 95.92

புதுக்கோட்டை 95.88

கடலூா் 95.57

சென்னை 95.43

காஞ்சிபுரம் 95.31

தேனி 95.27

பெரம்பலூா் 94.53

நாகப்பட்டினம் 94.38

கள்ளக்குறிச்சி 94.26

நீலகிரி 94.13

திருவள்ளூா் 94.11

திருப்பத்தூா் 93.68

மயிலாடுதுறை 93.51

தருமபுரி 93.49

செங்கல்பட்டு 93.25

திருவண்ணாமலை 92.87

அரியலூா் 91.70

கிருஷ்ணகிரி 91.31

திருவாரூா் 91.00

வேலூா் 90.73

ராணிப்பேட்டை 88.20

விழுப்புரம் 85.92