கரும்பு கொள்முதல் விலை: டன்னுக்கு ரூ.4,500 வழங்க அன்புமணி வலியுறுத்தல்
கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் வரும் அக்டோபா் மாதம் தொடங்கவுள்ள கரும்பு அரைவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.3,650 ஆகவும், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,383 ஆகவும் உயா்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயா்வு எந்த வகையிலும் போதுமானதல்ல.
Advertisement
Advertisement
ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்வதற்கு ரூ.3,300 செலவாகும் நிலையில், அதை விட வெறும் ரூ.83 மட்டும் கூடுதலாக விலை கொடுத்தால் உழவா்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது. கரும்புக்கு கட்டுப்படியாகும் கொள்முதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆகவே, உற்பத்திச் செலவு, அதனுடன் 50 சதவீதம் லாபம் மற்றும் போக்குவரத்துச் செலவு சோ்த்து டன்னுக்கு ரூ. 4,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் அன்புமணி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.