முகப்பு
தமிழ்நாடு

தமிழக மக்களின் நம்பிக்கையை விஜய் நிறைவேற்றுவார்: ராகுல் காந்தி

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு விஜய் அருகில் அமர்ந்து நிகழ்ச்சியை சிறப்பித்த ராகுல் காந்தி...

ராகுல் காந்திக்கு விஜய் வரவேற்பு - @RahulGandhi
பகிர்:

தமிழக மக்களின் நம்பிக்கையை விஜய் நிறைவேற்றுவார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் அவருக்கு பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக, சிங்கப்பூர் தூதரக உயர் ஆணையர், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு விஜய் அருகில் அமர்ந்து நிகழ்ச்சியை சிறப்பித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜயை வாழ்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு ஒரு புதிய தலைமுறையை; ஒரு புதிய குரலை; ஒரு புதிய சிந்தனையை தேர்ந்தெடுத்திருக்கிறது. விஜய்க்கு எமது நல்வாழ்த்துகள். தமிழக மக்களின் நம்பிக்கையை அவர் நிறைவேற்றுவார்” என்று பதிவிட்டிருக்கிறார்.

summary

Rahul Gandhi stated that Vijay would fulfill the hopes of the people of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments