சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்!
சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் கோட்-சூட்டில் வருகை தந்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாகத் தேர்வான 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. சட்டப்பேரவையின் இடைக்கால பேரவைத் தலைவராக சோழவந்தான் கருப்பையா செயல்பட்டு, புதிதாகத் தேர்வான உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழக முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் (51) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு கோட்-சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்-சூட் அணிந்து வந்து பங்கேற்றுள்ளார்.
Advertisement
Advertisement
அவருக்கு அடுத்த இடத்தில் சட்டப்பேரவையில் என். ஆனந்த் அமர்ந்துள்ளார். எதிர் திசையில் சட்டப்பேரவை திமுக குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அமர்ந்துள்ளார்.
பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்ட பிறகு 9 அமைச்சர்களும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உறுப்பினர்களும் பதவியேற்று வருகிறார்கள்.
Chief Minister Joseph Vijay also attended the first session of the Legislative Assembly in a coat-suit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.