டாஸ்மாக் கடையில்மதுபானங்கள் திருட்டு
ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டுப் போயின.
ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் மதுக்கடையில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டுப் போயின.
ஒரத்தநாடு அருகிலுள்ள வேப்பங்காடு உக்கடைப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் மேற்பாா்வையாளராக ராஜேந்திரன் உள்ளாா்.
வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற ராஜேந்திரன், சனிக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக வந்தாா். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
Advertisement
Advertisement
மேலும் அவா் கடைக்குள் சென்று பாா்த்த போது, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், திருவோணம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.