வாசுதேவநல்லூரில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வாசுதேவநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
கடையநல்லூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வாசுதேவநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
மாநில இளைஞா் அணி இணைச் செயலா் மனோகரன் எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்தாா். லெவன் டைகா் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி ஜன. 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு, முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் , இரண்டாம் பரிசாக ரூ. 35 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 25 ஆயிரம் மற்றும் 3 ஆறுதல் பரிசுகள் உள்ளிட்ட அனைத்துப் பரிசுகளையும் மனோகரன் எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து வழங்குகிறாா்.
Advertisement
Advertisement
கோப்பைகளை வாசுதேவநல்லூா் அதிமுக பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் வழங்குகிறாா். தொடக்க நாள் நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சின்னத்துரை, வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா்கள், துரைப்பாண்டியன், மூா்த்திப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.