FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர்!

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 26 ஜூன் 2026, 6:10 pm IST
முதல்வர் விஜய்யுடன் கே. வெங்கட நாராயணா. - படம்: எக்ஸ்.
பகிர்:

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணாவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடிகரும் முதல்வருமான விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' படத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த கே.வி.என் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தை கடந்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், படத்தின் தணிக்கையில் ஏற்பட்ட பிரச்னையால் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெற்றிபெற்று முதல்வராகவும் பதவியேற்றிருக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக, ஜனநாயகன் படம் திடீரென இணையத்தில் வெளியானது.

Advertisement

Advertisement

படம் வெளியாக நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரை சந்தித்த போதும் கே.வி.என் நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கட நாராயணா உடன் இருந்தார். அவர் விஜய்யுடன் சென்றது ஏன்? என்று அப்போது எதிர்ப்புகளும் கிளம்பியிருந்தன.

இந்த நிலையில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலர் சாய்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியான கே.வெங்கட நாராயணாவுக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் வழங்கப்படும்.

இந்த உயர் பதவியின் அதிகாரபூர்வக் காலம் ஓராண்டு மட்டுமே இருக்கும் என்ற போதிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நீடிக்கும் வரை பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக, தில்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முதன்மையான மற்றும் முக்கியப் பொறுப்பாகவுள்ளது.

மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்புக்கு தனது படத்தை தயாரித்தவருக்கும் அதே நேரத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்துடன் தமிழ்நாட்டுக்கும் மோதல்போக்கு நீடித்துவரும் சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்தவருக்கு விஜய் வழங்கியிருப்பதற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

summary

The Tamil Nadu government has issued a Government Order appointing K. Venkata Narayana, the producer of the film Jananayagan, as the Special Representative of the Tamil Nadu government in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments