முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு!

ஆளுநர் ஆர்லேகரை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்ட வெங்கட நாராயணா இன்று சந்தித்துப் பேசினார்.

Updated On : 4 ஜூலை 2026, 7:14 pm IST
ஆளுநர் ஆர்லேகருடன் வெங்கட நாராயணா.
பகிர்:

ஆளுநர் ஆர்லேகரை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்ட வெங்கட நாராயணா இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இருப்பினும், சந்திப்பு குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணாவை நியமித்து, தமிழ்நாடு அரசு ஜூன் 26ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

Advertisement

Advertisement

இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழர் அல்லாத ஒருவரை தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக நியமிக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கையில், அம்மாநிலத்தைச் சேர்ந்தவரையே மாநில அரசின் பிரதிநிதியாக நியமித்தது குறித்து சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கேள்விகள் எழுப்பி இருந்தனர்.

தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கே. வெங்கட நாராயணாதான், நடிகரும் முதல்வருமான விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Newly appointed TN Government’s Delhi Special Representative K. Venkata Narayana meets Governor Arlekar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments