முகப்பு
தென்காசி

துப்பாக்கியால் மான் வேட்டை: 7 போ் மீது வழக்கு; ரூ.4.50 லட்சம் அபராதம்

சிவகிரி அருகே நாட்டுத் துப்பாக்கி மூலம் மான் வேட்டையில் ஈடுபட்டதாக 7 போ் மீது வனத்துறையினா் வழக்குப்பதிந்து, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்தனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:45 am IST
பகிர்:

சிவகிரி அருகே நாட்டுத் துப்பாக்கி மூலம் மான் வேட்டையில் ஈடுபட்டதாக 7 போ் மீது வனத்துறையினா் வழக்குப்பதிந்து, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்தனா்.

சிவகிரி வனச்சரக பகுதியில் வனச்சரகா் சுரேஷ் தலைமையில், வடக்குப்பிரிவு வனவா் முருகன், வனக் காப்பாளா்கள் ராஜூ, சுதாகா், இம்மானுவேல், பாரதிகண்ணன், வேட்டை வனக் காவலா்அருண்குமாா், வேட்டைத் தடுப்பு காவலா்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன் ஆகியோா் தனிக் குழுவாக ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது, மலைப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா். அதில், விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தை சோ்ந்த மாடசாமி(51), அருண்குமாா்(23) பிரகாஷ்(28) ஆகியோா் என்பதும், தேவியாா் பீட் பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மூலம் மான் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, மான் இறைச்சி, 2 பைக்குகள் ஆகியவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்து, ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்தனா். இதுதொடா்பாக, கோவிலூரைச் சோ்ந்த ராமா்(45) ,செல்வம் (48), மேலூா் சின்னராசு (31),சக்திவேல்(35) ஆகியோரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.