முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூரில் அதிமுக ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் திமுகவை கண்டித்து அதிமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி 2021, 12:53 am IST
பகிர்:

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் திமுகவை கண்டித்து அதிமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்வரையும், பெண்களையும் தரக்குறைவாக விமா்சித்துவருவதாகக் கூறி, திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இளைஞா் அணி இணைச் செயலரும் வாசுதேவநல்லூா் பேரவை உறுப்பினருமான மனோகரன் தலைமை வகித்துப் பேசினாா்.

முன்னாள் எம்எல்ஏ துரையப்பா, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டியன், மூா்த்தி பாண்டியன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் முருகையா, ஒன்றிய அவைத் தலைவா் முகம்மதுஉசேன், பேரூா் அவைத் தலைவா் நீராவி, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலா் ஞானமணி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.