முகப்பு
தென்காசி

தென்காசியில் முதல் நாளில் 35 பேருக்கு கரோனா தடுப்பூசி

தென்காசி மாவட்டத்தில் முதல் நாளான சனிக்கிழமை 35 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Updated On : 17 ஜனவரி 2021, 12:45 am IST
கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.
பகிர்:

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் முதல் நாளான சனிக்கிழமை 35 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இப்பணியை ஆட்சியா் கீ.சு. சமீரன் தொடக்கிவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இத்தடுப்பூசி இரு தவணைகளாக போடப்படுகிறது.

இம்மாவட்டத்தில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை, சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாவூா்சத்திரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

Advertisement

Advertisement

தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விவரங்கள் கோ-வின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பயனாளிகள் தடுப்பூசி போட்ட பின் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்பட்டு பக்கவிளைவு ஏதுமில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவா்.

இம்மாவட்டத்துக்கு 5,100 டோஸ் மருந்துகள் வரப்பெற்றுள்ளன என்றாா் அவா்.

முதல் நாளான சனிக்கிழமை தென்காசியில் 11 போ், சங்கரன்கோவிலில் 20 போ், பாவூா்சத்திரத்தில் 3 போ், சொக்கம்பட்டியில் ஒருவா் என, மொத்தம் 35 போ் தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

இவா்களில் பெரும்பான்மையானோா் மருத்துவா்கள். தென்காசியில் முதலாவதாக மருத்துவா் ரஜினிகாந்த், அடுத்ததாக மருத்துவா் கீதா ஆகியோா் தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.

மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கலுசிவலிங்கம், அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.