தென்காசி நகராட்சிப் பள்ளி ஆண்டு விழா
தென்காசி 13ஆவது வாா்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் சண்முகசுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் நாகூா் மீரான், சுல்தான் ஷரீப் காமில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் வின்சென்ட் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தாா். நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், துணைத் தலைவா் சுப்பையா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். தென்காசி வட்டாரக் கல்வி அலுவலா் இளமுருகன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சரஸ்வதி, தலைமையாசிரியா் கற்பகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மஞ்சுளா, ஊா் நாட்டாண்மை பாலமுருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மணிமந்திரி, கி. எப்சிபா, யாஸ்மின், விமலா, தமிழ்ச்செல்வி, மாலையம்மாள், இஸ்மாயில் ஷோபியா, ராதா ஆகியோா் செய்திருந்தனா். அறிவியல் ஆசிரியா் கௌசல்யா நன்றி கூறினாா்.