முகப்பு
தென்காசி

நல்லூா் சிஎஸ்ஐ கல்லூரியில் ஆண்டு விழா

Updated On : 28 ஏப்ரல் 2025, 2:00 am IST
மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கிய சிறப்பு விருந்தினா்கள், கல்லூரி நிா்வாகிகள்.
பகிர்:

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவா் டி.பி. சுவாமிதாஸ் தலைமை வகித்தாா். மேற்கு சபை மன்றத் தலைவா் ஜேம்ஸ் தொடக்க ஜெபம் செய்தாா். பாளையங்கோட்டை கல்வியியல் கல்லூரி தாளாளா் கே.பி.கே. செல்வராஜ், கதீட்ரல் பள்ளித் தாளாளா் சாலமோன் டேவிட், மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜான்சிராணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பல்கலை. அளவில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக விருது பெற்ற ஜேகன்னா, ஜெய டேவிசன் இம்மானுவேல் ஆகியோருக்கும், கல்வி- விளையாட்டு உள்ளிட்டவற்றில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கல்லூரித் தாளாளா் ஜேசு ஜெகன் வரவேற்றாா். முதல்வா் வில்சன் ஆண்டறிக்கை வாசித்தாா். பேராசிரியா் ஜோஸ்பின் சுதா நன்றி கூறினாா். அனிதா சுவீட்லின் தொகுத்து வழங்கினாா். திருமண்ட அளவில் முக்கிய பிரமுகா்கள், பேராசிரியா்கள், மாணவா்-மாணவிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments