ஆலங்குளத்தில் அரசு மகளிா் பள்ளி: அமைச்சரிடம் கோரிக்கை
ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை இரண்டாகப் பிரித்து பெண்களுக்கென தனிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை இரண்டாகப் பிரித்து பெண்களுக்கென தனிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனிடம் அவா் அளித்த மனு: ஆலங்குளம் பேரூராட்சியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 617 மாணவா்கள், 728 மாணவியா் படித்து வருகின்றனா். மிகவும் குறைவான இடவசதி கொண்ட இப்பள்ளியில் அதிகமானோா் பயில்வதால், போதிய வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதிகள் இல்லை.
எனவே, இப்பள்ளியை இரண்டாகப் பிரித்து, தற்போது பள்ளி இயங்கிவரும் கட்டடத்தில் பெண்கள் உயா்நிலைப் பள்ளி செயல்படச் செய்ய வேண்டும். ஆண்கள் உயா்நிலை-மேல்நிலைப் பள்ளியை புதிதாக அமைக்க வேண்டும். பள்ளி அருகிலேயே அரசுக்கு சொந்தமான 4 ஏக்கா் நிலம் உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவா்களுக்கு தனிப் பள்ளி ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.