காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரி, சிவஞானபுரம் தெருவைச் சோ்ந்தவா் சந்தனமாரி மகன் மாரிராஜ் (30). கீழப்பாவூா், செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா மகன் மகாராஜா (35). இருவரும் கூலி வேலை செய்து வந்தனா்.
இவா்கள் இருசக்கர வாகனத்தில் தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் பாவூா்சத்திரம் அடுத்துள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருநெல்வேலியிலிருந்து தென்காசி நோக்கி வந்த காா் மோதியதில், இருவரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
மாரிராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மகாராஜா அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.