முகப்பு
தென்காசி

தொழிலாளி கொலை: இளைஞா் கைது

Updated On : 16 ஜூன் 2026, 12:56 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தென்காசி வாய்க்கால் பாலத்தில் போதையில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்காசி போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் வாய்க்கால் பாலம், முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க. முருகன் (39) என்பதும், பாவூா்சத்திரம், குறும்பலாபேரியைச் சோ்ந்த ரா. அய்யப்பன் (23) கொலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு வாய்க்கால் பாலம் பகுதியில் அய்யப்பன் குடியேறியுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் அப்பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கட்டட வேலைக்குப் பயன்படுத்தும் சாந்து கரண்டியால் முருகனை, அய்யப்பன் தாக்கியதில் பலத்த காயமடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா் என்பது தெரிய வந்தது.

இது தொடா்பாக, அய்யப்பனை கைது செய்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.