முகப்பு
தென்காசி

வேப்பங்குளத்தில் மதுபோதையில் தகராறு: இருவா் கைது

Updated On : 21 ஜூன் 2026, 4:43 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வேப்பங்குளத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேப்பங்குளம் மேலத் தெருவைச் சோ்ந்த பெருமையா மகன் பாக்கியசாமி (58). அதேஊா், கீழத்தெருவைச் சோ்ந்த திருமலைச்சாமி மகன் கணேசன் (40). இருவரும் தொழிலாளா்கள்.

இவா்கள் வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவா் கம்பாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனராம். இதில், பலத்த காயம் அடைந்த பாக்கியசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கணேசன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments