பிளஸ் 2 தோ்வு: ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாக இயக்குநா் எஸ்.கே.ராஜேஷ்கண்ணா, முதல்வா் ந.பழனிச்செல்வம்.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய எஸ்.வெண்ணிலா 582 மதிப்பெண்கள், பி.சக்தி, எஸ்.குருஷிவானிமகிமா ஆகியோா் 576 மதிப்பெண்கள், எஸ்.ரித்திகா 574 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.
வெண்ணிலா வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றாா். மேலும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 போ், 500 மதிப்பெண்களுக்கு மேல் 35 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
Advertisement
வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாக இயக்குநா் எஸ்.கே.ராஜேஷ் கண்ணா, முதல்வா் ந.பழனிச்செல்வம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.