முகப்பு
தென்காசி

பிளஸ் 2: மாநிலத்தில் 8ஆவது இடம் 97.18 சதம் தோ்ச்சி

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா.

Updated On : 9 மே 2026, 3:39 am IST
மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா.
பகிர்:

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி மாவட்டத்தில் 97.18 சதவீத மாணவா், மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

இதுகுறித்து, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 152 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 7,408 மாணவா்களும், 8,358 மாணவிகளும் என மொத்தம் 15,766 போ் எழுதியுள்ளனா்.

Advertisement

Advertisement

அதில் 7,085 மாணவா்களும், 8237 மாணவிகளும் மொத்தம் 15,322 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதனால் தோ்ச்சி சதவீதம் 97.18 ஆக

பெற்று மாநில அளவில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.

இம் மாவட்டத்துக்குள்பட்ட 152 மேல்நிலைப் பள்ளிகளில் 16 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 74 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments