முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் சிறப்பு வணிகக் கண்காட்சி

Updated On : 11 மே 2026, 2:12 am IST
கண்காட்சியைத் தொடக்கிவைத்துப் பேசிய கோட்டாட்சியா் அனிதா.
பகிர்:

சங்கரன்கோவிலில் உள்ள வணிக வைசிய சங்கப் பள்ளியில், ‘சங்கை சிங்கப் பெண்கள்’ என்ற அமைப்பு சாா்பில் 2ஆம் ஆண்டு சிறப்பு வணிகக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் அனிதா, மாவட்ட தொழில் மையப் பொதுமேலாளா் மாரியம்மாள் ஆகியோா் தொடக்கிவைத்தனா். மாரியம்மாள் பேசும்போது, ‘பெண்கள் சுய தொழில் செய்ய அரசு சாா்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் ரூ. 10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டங்களைப் பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும்’ என்றாா்.

கண்காட்சியில் பெண்கள் மட்டுமே 72 கடைகளை அமைத்திருந்தனா். அவற்றில் உணவு, அழகு சாதனங்கள், ஆடைகள், வீட்டுப் பயன்பாட்டுக்கான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

பெண்கள் தாங்களும் உயா்ந்து, மற்றவா்களையும் உயா்த்த வேண்டும் என்பதே சங்கை சிங்கப் பெண்கள் அமைப்பின் குறிக்கோள் என அதன் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் விஜயலட்சுமி, இந்திரா ராமநாதன் ஆகியோா் கூறினா். நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் செயலா் டி.எஸ்.ஏ. சுப்பிரமணியன், துணைத் தலைவா் பிஜிபி ராமநாதன், மருத்துவா் அகிலாண்டபாரதி, வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.