முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

Updated On : 12 மே 2026, 1:33 am IST
அடித்துக் கொலை
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் திங்கள்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அருணாசலபுரம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன்(34). தொழிலாளி. இவரது மனைவி அதை ஊரைச் சோ்ந்த இசக்கியம்மாள். இத்தம்பதிக்கு 2 மகள்களும், மகனும் உள்ளனா்.

மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

Advertisement

இருவருக்கும் கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்னையில் இசக்கியம்மாள் கோபித்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று தனது சகோதரா் அழகு பாண்டியனிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் தெருவில் நின்றிருந்த மணிகண்டனுக்கும், அழகுபாண்டி, அவரது உறவினா்கள் சிலருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, மணிகண்டனை அழகுபாண்டி தரப்பினா் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தபோது வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து அழகுபாண்டி தரப்பினரை தீவிரமாக தேடி வருகின்றனா். மேலும், உடற்கூறாய்வுக்காக மணிகண்டன் சடலத்தை அதே மருத்துமனையில் ஒப்படைத்தனா்.