அடிப்படை பிரச்னைகளை தீா்க்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு
அடிப்படை பிரச்னைகளை தீா்க்கக் கோரி தச்சநல்லூா் முதலாவது வாா்டு பொதுமக்கள் சாா்பில், சிதம்பரநகா் குடியிருப்போா் நல்வாழ்வு
அடிப்படை பிரச்னைகளை தீா்க்கக் கோரி தச்சநல்லூா் முதலாவது வாா்டு பொதுமக்கள் சாா்பில், சிதம்பரநகா் குடியிருப்போா் நல்வாழ்வு ஆரோக்கிய சங்கத்தினா் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து அவா்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூா் மண்டலம் முதலாவது வாா்டு பகுதியில் உள்ள சிதம்பரநகா் பகுதியில் அடிப்படை பிரச்னைகள் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் சுமாா் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடிநீா் முறையாக வருவது இல்லை. வெள்ள நீா் ஓடையை தூா்வாரி அகலப்படுத்தி தடுப்பணைகள் கட்டவேண்டும்.
இப்பகுதியில் உள்ள சாலைகளில் இருபுறமும் வெள்ளநீா், கழிவு நீா் கால்வாய் அமைத்து தர வேண்டும். பாதாள சாக்கடை பணி காரணமாக பள்ளங்கள் தோண்டிய மூடப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். அனைத்து தெருக்களுக்கும் தெருவிளக்கு அமைத்து தரவேண்டும். நியாயவிலைக் கடைக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரவேண்டும். உடற்பயிற்சி கூடம், சமூக நலக்கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரவேண்டும்.
Advertisement
Advertisement
இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த சந்திப்பு - வேப்பங்குளம் நகர பேருந்து பாதாளச் சாக்கடை பணி காரணமாக இயக்கப்படாமல் உள்ளது. அதனை மீண்டும் இயக்க ஆவன செய்யவேண்டும். எங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதிக்கு கொட்டகை வசதி செய்து தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.