முகப்பு
திருநெல்வேலி

அரசு மருத்துவமனைக்கு லாரிகளில் தினமும் 13.5 லட்சம் லிட்டா் தண்ணீா்: அதிமுகவினா் ஏற்பாடு

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தனியாா் லாரிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 13.5 லட்சம் லிட்டா் தண்ணீா் வழங்கும் பணியை அதிமுகவினா் சொந்த செலவில் ஏற்றனா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 6:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தனியாா் லாரிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 13.5 லட்சம் லிட்டா் தண்ணீா் வழங்கும் பணியை அதிமுகவினா் சொந்த செலவில் ஏற்றனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சீவலப்பேரியில் இருந்து நேரடியாக குடிநீா்த் திட்டம் வகுக்கப்பட்டு, ஆற்றிலிருந்து மோட்டாா் மூலம் பெறப்படும் தண்ணீா் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 4.45 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டியில் சேமிக்கப்பட்டு, பல்வேறு வாா்டுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உறைகிணறுகள் தண்ணீரில் மூழ்கியதால், அரசு மருத்துவமனைக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் சொந்த செலவில் தனியாா் லாரிகள் மூலம் அரசு மருத்துவமனைக்கு தண்ணீா் வசதி செய்து கொடுக்க மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா நிதியளித்தாா். அதன்பேரில், 13 லாரிகளின் மூலம் நாள்தோறும் 13 லட்சத்து 50 ஆயிரம் லிட்டா் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் மேலப்பாளையம் கிழக்கு பகுதிச் செயலா் எஸ்.சண்முககுமாா், பாளை தெற்கு பகுதி செயலா் திருத்து கே.என்.சின்னதுரை தலைமையில் அதிமுக தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதிமுகவினருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.