முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே மாடியிலிருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கடையம்அருகே முதலியாா்பட்டியில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 1:08 am IST
பகிர்:

அம்பாசமுத்திரம்: கடையம்அருகே முதலியாா்பட்டியில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள முதலியாா்பட்டி, காந்திநகா், 5ஆவது தெவைச் சோ்ந்த காஜா முகைதீன் மகன் முகம்மது அமீா் (10).

வியாழக்கிழமை (ஜன. 14) வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தவறியதில் மாடியிலிருந்து கீழே விழுந்தாராம்.

Advertisement

Advertisement

இதில் தலையில் பலத்த காயமடைந்த முகம்மது அமீரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.