முகப்பு
திருவள்ளூர்

வெளியூர் பஸ்கள் ரத்து: பயணிகள் அவதி

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆங்காங்கே பஸ்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதால் திருவள்ளூரில் புதன்கிழமை இரவு

Updated On : 2 மே 2013, 12:25 pm IST
பகிர்:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆங்காங்கே பஸ்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதால் திருவள்ளூரில் புதன்கிழமை இரவு வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி, திருவள்ளூர் பஸ் இரவு 7 மணியுடன் அனைத்து வெளியூர் பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

மேலும் பஸ் நிலையத்தில் இருக்கும் அறிவிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையும் பூட்டப்பட்டன.

Advertisement

Advertisement

இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ்கள் கிடைக்காமலும், அடுத்த பஸ் குறித்த எவ்வித தகவல் தெரியாமலும் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் பல பயணிகள், சாலைகளில் செல்லும் லாரி, வேன் போன்ற வாகனங்களை நிறுத்தி வாசல்களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

இது போன்ற காலக்கட்டங்களில் போலீஸாரின் உதவியுடன் முக்கிய பகுதிகளுக்காவது பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.