முகப்பு
திருவள்ளூர்

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு

திருத்தணி அருகே புதன்கிழமை பெய்த பலத்த மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி

Updated On : 12 செப்டம்பர் 2013, 11:10 am IST
பகிர்:

திருத்தணி அருகே புதன்கிழமை பெய்த பலத்த மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

திருத்தணியை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி (48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி குட்டியம்மாள்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதனிடையே செவ்வாய்க்கிழமை, அவர்களின் குழந்தைகள் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் புதன்கிழமை காலை பெய்த பலத்த மழையில் அவர்களின் வீட்டு மண்சுவர் இடிந்து குமாரசாமி மீது விழுந்தது. இதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

தகவலறிந்த திருத்தணி தாசில்தார் ஜான்சௌந்தர்ராஜ் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.