FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு அஞ்சலி - நேரலை செய்திகள் இணைந்திருங்கள்.

Updated On : 10 ஜூன் 2026, 10:37 pm IST
பாரதிராஜா - x
பகிர்:
Updated On : 10 ஜூன் 2026, 9:43 am IST

பாரதிராஜா காலமானார்

இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார்.

Updated On : 10 ஜூன் 2026, 9:43 am IST

முதல்வர் விஜய் மரியாதை

இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 10 ஜூன் 2026, 9:43 am IST

‘என் இனிய தமிழ் மக்களே’

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே தனக்கான தடத்தை திரையுலகில் படைத்தார்.

Advertisement

Advertisement

கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா என கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி அசத்தினார்.

Updated On : 10 ஜூன் 2026, 10:12 am IST

சீமான் அஞ்சலி

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 10 ஜூன் 2026, 10:13 am IST

அரசு மரியாதை

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

Updated On : 10 ஜூன் 2026, 10:14 am IST

நடிகர் சிவக்குமார், சூர்யா அஞ்சலி

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சுகாஷினி, கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 10 ஜூன் 2026, 10:14 am IST

மு.க. ஸ்டாலின் அஞ்சலி

இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 10 ஜூன் 2026, 10:33 am IST

மக்களின் மனங்களில் பாரதிராஜா வாழ்வார்

அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Updated On : 10 ஜூன் 2026, 10:56 am IST

இபிஎஸ் இரங்கல்

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 10 ஜூன் 2026, 11:07 am IST

டிடிவி தினகரன் இரங்கல்

“தமிழர்களின் வாழ்வியலைத் திரைப்படமாக எடுத்து திரையுலகில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவரும், தலைமுறைகள் கடந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவருமான இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகைகளின் கதாபாத்திர வடிவமைப்பாலும், இன்னபிற கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அற்புதமான கலைஞர் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.

நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல்வேறு நிலைகளிலும் தமிழ் சினிமாவையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”

Updated On : 10 ஜூன் 2026, 11:09 am IST

ஜி.கே. வாசன் இரங்கல்

”தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக, நடிகராக விளங்கிய பாரதிராஜாவின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. 1977 ல் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தன் இறுதி மூச்சு வரை தமிழ் திரையுலகத்திற்காக பாடுபட்டவர். தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் எனப் பேரும் புகழும் பெற்றவர்”

Updated On : 10 ஜூன் 2026, 11:11 am IST

நயினார் நாகேந்திரன் இரங்கல்

பாரதிராஜா மறைவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"தமிழ் திரையுலகின் “இயக்குநர் இமயம்” எனப் போற்றப்பட்ட பாரதிராஜா மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், மீளாத துயரமும் அடைந்தேன். அதுவரை திரைப்படக் கலை சினிமா செட்டுகளுக்குள் மட்டுமே கட்டுப்பட்டிருந்த காலத்தில், இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களின் மண்வாசனையையும், மக்களின் இயல்பான வாழ்வியலையும் வெள்ளித்திரையில் உயிர்ப்பித்து, தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கிய மாபெரும் படைப்பாளி அவர்.

”16 வயதினிலே”, “அலைகள் ஓய்வதில்லை”, “முதல் மரியாதை”, “வேதம் புதிது”, “கருத்தம்மா” உள்ளிட்ட எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்கில் உயர்த்தியதோடு, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலையான இடத்தைப் பெற்றவர்.

திரைப்பட இயக்குநராக மட்டுமல்லாது, சமூக அக்கறை மிக்க சிந்தனையாளராகவும், பல தலைமுறை கலைஞர்களை உருவாக்கிய வழிகாட்டியாகவும் அவர் திகழ்ந்தார்.

அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கும், கலை இலக்கிய உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரையுலக சகோதரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

Updated On : 10 ஜூன் 2026, 11:20 am IST

பாரதிராஜா உடலுக்கு இளையராஜா அஞ்சலி!

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு இசைஞானி இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 10 ஜூன் 2026, 11:45 am IST

பாரதிராஜாவுக்கு ஆளுநர் இரங்கல்

Updated On : 10 ஜூன் 2026, 12:25 pm IST

நடிகர் ரஜினி அஞ்சலி

இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 10 ஜூன் 2026, 1:13 pm IST

பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் கமல்ஹாசன்!

Updated On : 10 ஜூன் 2026, 4:28 pm IST
Updated On : 10 ஜூன் 2026, 4:29 pm IST

ரேவதி, ராதிகா, ராதா... ர வரிசையில் பெயர் சூட்டிய பாரதிராஜாவின் ஃபார்முலா!

இயக்குநர் பாரதிராஜா அவர் அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கு அவர்களுடைய இயற்பெயரை வைக்காமல், ர வரிசையில் பெயர் சூட்டும் வழக்கத்தை கொண்டிருந்தார்.

Updated On : 10 ஜூன் 2026, 4:30 pm IST

பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தகவல்.

Updated On : 10 ஜூன் 2026, 6:08 pm IST

இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் புகழஞ்சலி!

summary

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவில், “தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.

என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே...” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Updated On : 10 ஜூன் 2026, 10:32 pm IST

சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

தேனி, வத்தலகுண்டு அருகே காட்ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நாளை (ஜூன் 11) பிற்பகல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments