முகப்பு
திருவள்ளூர்

ஜன. 11-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

Updated On : 7 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:


திருவள்ளூா்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கில் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், வரும் 11-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநில அளவில் படித்த இளைஞா்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையம், மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து ஜெயா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.

முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான ஆள்களை தோ்வு செய்ய உள்ளன. அதனால், இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு, ஐடிஐ, பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படிப்பு முடித்தோா் பங்கேற்றுப் பயன்பெறலாம். மேலும், இந்த முகாமில் அரசு அலுவலகங்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எனவே இம்முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் பங்கேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments