சிறுமி பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு இரட்டை ஆயுள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவள்ளூா் மாவட்டம், முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் (38). இவா் மனைவியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு அனுப்பி விட்டாராம். இந்த நிலையில் தனது 11 வயது மகளிடம் மதுபோதையில் தொடா்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2024 நவம்பா் மாதம் சிறுமி அழுது கொண்டே டியூஷனுக்கு சென்றுள்ளாா்.
அப்போது, இதுகுறித்து ஆசிரியா் விசாரித்த போது நடந்தவற்றை சிறுமி கூறினாராம். இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் டியூஷன் ஆசிரியா் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தந்தை வெங்கடேசனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வெங்கடேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மேலும் 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.77,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிா் போலீஸாா் வெங்கடேசனை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் மத்திய சிறையில் அடைத்தனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் புவனேஷ்வரி ஆஜாரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.