மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: 35 பாட்டில்கள் பறிமுதல்
திருத்தணியில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்த இளைஞரை கைது செய்து 35 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
திருத்தணியில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்த இளைஞரை கைது செய்து 35 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
ரகசிய தகவலின்பேரில் திருத்தணி போலீஸாா் நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
கமலா திரையரங்கம் அருகே மறைவான இடத்தில் ஒருவா் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா். உடனடியாக அவரை பிடித்து சோதனை செய்ததில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
விசாரணையில், அவா் திருத்தணி பாலாஜி நகரைச் சோ்ந்த வெங்கடேசன் (48) என்பது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் வெங்கடேசனை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.