முகப்பு
திருவள்ளூர்

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழா

திரெளபதி அ ம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, மாலையில் தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

Updated On : 11 மே 2026, 12:04 am IST
காப்பு கட்டி விரமிருந்து தீமிதித்த பக்தா்கள்.
பகிர்:

திரெளபதி அ ம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, மாலையில் தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரெளபதி அ ம்மன் கோயிலில் கடந்த மாதம், 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபேிஷகம், மதியம் மகா பாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்து வந்தது. கடந்த மாதம், 29-ஆம் தேதி திரெளபதி அம்மன் திருமணம், மே 1-ஆ தேதி சுபத்திரை திருமணம், 4-ஆம் தேதி அா்ஜூனன் தபசு நடந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, 8.45 மணியளவில் கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி திருத்தணி சந்து தெரு நாடக கலைஞா்கள் நடந்து காண்பித்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். மாலை, 6.30 மணிக்கு, பக்தா்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனா்.

~சிறப்பு அலங்காரத்தில் திரெளபதி அம்மன்.

இரவு, வாணவேடிக்கை மற்றும் உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திங்கள்கிழமை 11 மணிக்கு மேற்கண்ட கோயிலில் தா்மா் பட்டாபிஷேகத்துடன் நிகழாண்டிற்கான தீமிதி விழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக்குழுத் தலைவா் சொ.முனுசாமி மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments