பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே பேருந்து நிறுத்தம் முன்பு சாலையோரம் நின்றிருந்த மூதாட்டி இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே பேருந்து நிறுத்தம் முன்பு சாலையோரம் நின்றிருந்த மூதாட்டி இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் துளசியம்மாள்(70). இவா் கறவை மாடு வாங்குவதற்காக திருவள்ளூா் அடுத்துள்ள பாண்டூா் கிராமத்திற்கு சென்றபோது, பேருந்து நிறுத்தம் முன்பு சாலையோரம் நின்றிருந்தாராம்.
அப்போது திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது மகள் சாவித்திரி செய்த புகாரின்பேரில் திருவள்ளூா் கிராமிய போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டுநா் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.