தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தாய்மொழியில் படித்தோருக்கு தமிழக அரசுப் பணியில் 60 சதவீத முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூா் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்ட கொள்கை விளக்கச் செயலா் கோ.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ந. மதி, மாநில கொள்கை விளக்கச் செயலா் மு. மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றுப் பேசினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.