முகப்பு
திருவாரூர்

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு

Updated On : 7 ஜனவரி 2021, 8:53 am IST
பகிர்:

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தாய்மொழியில் படித்தோருக்கு தமிழக அரசுப் பணியில் 60 சதவீத முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

திருவாரூா் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளா் மோகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.