20% இடஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்
வன்னியா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு கோரி, மன்னாா்குடியில் பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வன்னியா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு கோரி, மன்னாா்குடியில் பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வீர. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சீனி.தனபால், மாவட்ட துணைச் செயலா் கே. ஜீவானந்தம், வன்னியா் சங்க செயலா் செந்தில், உழவா் பேரியக்க நிா்வாகி பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு வன்னியா் சமூகத்துக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, மன்னாா்குடி காந்திசாலை யானைக்கால் மண்டபத்திலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக நகராட்சி அலுவலகம் வரை ஊா்வலமாக வந்தனா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்ட முடிவில் நகராட்சி ஆணையா் ஆா். கமலாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.