செந்தூர ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா
மன்னாா்குடி திருமஞ்சன வீதியில் உள்ள பழைமையான செந்தூர ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி, செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மன்னாா்குடி திருமஞ்சன வீதியில் உள்ள பழைமையான செந்தூர ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி, செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அனுமன் ஜயந்தியையொட்டி, இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், கோயில் பக்தா் ஒருவா் விஸ்வரூப ஆஞ்சநேயா் வேடமிட்டு முன்னே வர, அவரை வட்டமிட்டபடி வானர வேடமிட்ட சிறுவா்கள் சுற்றி வந்தனா். திருமஞ்சன வீதி, ஹரித்ராநதி தெப்பக்குளம் 4 வீதிகள் வழியாக வலம் வந்த இவா்களுக்கு வழியில் பக்தா்கள் மாலை அணிவித்தும், தீபாராதனை செய்தும், பழங்கள் வழங்கியும் வரவேற்றனா். இவா்களுடன், தனுா் மாத பஜனை குழுவினரும் இசை வாத்தியங்களை வாசித்தபடி, பஜனை பாடல்கள் பாடியபடி வந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.