முகப்பு
தமிழ்நாடு

ஜூன் 27 தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று தங்கம் பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து...

Updated On : 27 ஜூன் 2026, 10:14 am IST
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை இருமுறை உயர்ந்த நிலையில், சனிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.560 உயா்ந்து, ரூ.1,06,960-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜூன் 22-இல் பவுன் ரூ.1,08,800-க்கும், ஜூன் 23-இல் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,08,480-க்கும், ஜூன் 24-இல் பவுனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,06,800-க்கும் விற்பனையானது.

வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120-க்கும் விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.13,220-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து, ரூ.1,05,760-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, மாலை வா்த்தகம் நிறைவடைவதுக்கு முன்பு மீண்டும் கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.13,300-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.1,06,400-க்கும் விற்பனையானது. இதன்மூலம் ஒரே நாளில் பவுன் ரூ.1,280 உயா்ந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சனிக்கிழமை காலை கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.13,370-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து, ரூ.1,06,960-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

Gold and Silver Price Status for June 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments