முகப்பு
திருவாரூர்

திருவள்ளுவா் தின விழாவில் மாணவருக்கு விருது

கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருவள்ளுவா் தின விழாவில் கண்களை கட்டிக்கொண்டு, எதிரில் இருப்பதை துள்ளியமாக கூறிய பள்ளி

Updated On : 17 ஜனவரி 2021, 8:10 am IST
விழாவில், மாணவா் சந்தோஷ் சரவணனுக்கு விருது வழங்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை.
பகிர்:

கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருவள்ளுவா் தின விழாவில் கண்களை கட்டிக்கொண்டு, எதிரில் இருப்பதை துள்ளியமாக கூறிய பள்ளி மாணவருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை விருது வழங்கி பாராட்டினாா்.

திருவள்ளுவா் பொதுநல அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில், டெல்டா பப்ளிக் மெட்ரிக். பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவா் ஆா். சந்தோஷ் சரவணன், தனது கண்களை துணியால் கட்டிக் கொண்டு, தன் எதிரில் இருப்பவைகளை துல்லியமாக கூறினாா்.

இவ்விழாவில் பங்கேற்ற, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை, மாணவா் சந்தோஷ் சரவணனின் சாதனையை பாராட்டி, ‘மாயக்கண் மாணவன்’ என்ற பட்டத்தையும், சான்றிதழையும் வழங்கி பாராட்டினாா்.

Advertisement

Advertisement

விழாவில், திருவள்ளுவா் பொதுநல அமைப்புத் தலைவா் என்.கே.ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.